கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2023 1:56 AM IST (Updated: 1 July 2023 4:48 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் தாசில்தார் அலுவலம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் கார்த்தி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட நிர்வாகிகள், அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாபநாசம் தாசில்தார் பூங்கொடியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story