கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே 52 புதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தினத்தை கிராம சபை கூட்டம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்னேஷ், பற்றாளர்கள் ஒன்றிய காசாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கிராம வளர்ச்சி, சாலை மேம்பாடு, சுகாதார வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி வரவு செலவு குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் லோகநாதன் நன்றி கூறினார். இதேபோல் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதேபோல் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமை தாங்கினர். பள்ளிக மாணவ,மாணவிகளின் கல்வி வளர்ச்சி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன.


Next Story