அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி கிராம சபை கூட்டம் கலெக்டர் அறிவிப்பு


அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி கிராம சபை கூட்டம்  கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டம்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினம்

இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகித்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், நெகிழிக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார்,சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் (வி.பி.ஆர்.பி.) ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story