கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டம் நடைபெற்றது
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே வாராப்பூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் கட்டையம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சித்ரா வரவேற்று பேசினார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் பொது செலவினம், வரவு- செலவு கணக்குகளை பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் துண்டு பிரசுரமாக வழங்கினார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியே வழங்கினார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ் குமார், சத்யன், வேளாண்மை துறை அலுவலர்கள் பாலமுருகன், செந்தில்குமார், கிராம நிர்வாக அதிகாரி அபிநயா, ஒன்றிய பொறியாளர் முருகேஸ்வரி, வாராப்பூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் அலமேலு மங்கை, கட்டையம்பட்டி தலைமையாசிரியர் நூர்ஜஹான், அங்கன்வாடி பணியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.