கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

காரியாபட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ரவி தலைமையிலும், குரண்டி கிராமத்தில் ஊராட்சி மன்றதலைவர் சிவசக்தி தலைமையிலும், தோணுகால் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அழகிய நல்லூர்

புதுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோரது தலைமையிலும், டி.வேப்பங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதீஸ்வரன் தலைமையிலும், பந்தனேந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், அழகிய நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மேலும் காரியாபட்டி, நரிக்குடிஊராட்சி ஒன்றியங்கள் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story