ஆண்டிப்பட்டியில் கிராம சபை கூட்டம்


ஆண்டிப்பட்டியில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது

தேனி

வார்டு பகுதி சபை

உள்ளாட்சி தினத்தையொட்டி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சந்திரகலா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தில் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஒருசில இடங்களில் சாக்கடை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தனர்.

விரைவில் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், தி.மு.க. நகர செயலாளர் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, கவுன்சிலர்கள் ராமசாமி, முத்துராமன், பஞ்சு, சுரேஷ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டம்

இதேபோல், திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அக்‌ஷயா தலைமை தாங்கினார். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் தலைவர் வேல்மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மீரா, மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார்.

கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் தலைவர் காளித்தாய் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உதயபிரகாஷ், ஊராட்சி செயலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜதானி ஊராட்சியில் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.


Related Tags :
Next Story