சிவகாசி யூனியனில் கிராம சபை கூட்டம்


சிவகாசி யூனியனில் கிராம சபை கூட்டம்
x

சுதந்திரதினத்தையொட்டி சிவகாசி யூனியனில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சுதந்திரதினத்தையொட்டி சிவகாசி யூனியனில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

சுதந்திரதினத்தை யொட்டி நேற்று சிவகாசி யூனியன் ஆனையூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் லயன் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். ஓன்றிய கவுன்சிலர் கவிதாபிரவீன், பற்றாளர் ராமமூனிஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.

தேவர்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் முத்து வள்ளி மச்சக்காளை தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, பற்றாளர் செல்வகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் கருப்பசாமி செய்திருந்தார்.

சித்துராஜபுரம்

இதேபோல் சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜம்மாள், விஜயலட்சுமி, மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் அருள்ராஜ் செய்திருந்தார்.

விஸ்வநத்தம் பஞ்சாயத்தில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் சக்தி வேல்நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செல்வம் செய்திருந்தார். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கவிதா பாண்டிய ராஜ் துணைத்தலைவர் புஷ்ப வேணி, ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, செயலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பள்ளப்பட்டி

பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து பொறுப்பு தலைவர் ராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் லோகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலாமத்தூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் விஜயாசின்னமருது தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை கண்ணன் செய்திருந்தார்.


Next Story