செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார். சுதந்திர தின கலை நிகழ்ச்சிபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிழ்வீராபுரம் ஊராட்சியில் தலைவர் டில்லி, துணைத்தலைவர் சரவணன், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, துணைத்தலைவர் கே.பி.ராஜன், ஆப்பூர் ஊராட்சி தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் கேசவன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஆலப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பரிமளா ஜெய்சங்கர், துணைத்தலைவர் சத்யா கோபி, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், துணைத்தலைவர் இந்துகுமார், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் சாந்த குமாரி அரிபாபு தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
புலிப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் நிர்மலா அசோகன், துணைத்தலைவர் குமரேசன், ரெட்டிபாளையம் ஊராட்சியில் தலைவர் சந்தியா செந்தில், துணைத்தலைவர் சந்தானம், பட்ரவாக்கம் ஊராட்சியில் தலைவர் துர்கா செல்வராஜ், துணைத்தலைவர் ராமன், வல்லம் ஊராட்சியில் தலைவர் காந்தி, துணைத்தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, குடிநீர், சாலை, மின்வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரவேண்டும். மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முள்ளிகொளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தனிகைவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சில வார்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் தனிகைவேல் திணறினார். இதனால் அந்த பகுதி மக்களில் ஏராளமானோர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கலைந்து சென்றனர்.
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் மல்லிகா மணி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
ஒரத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி அருள் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு அ.தி.மு.க உறுப்பினர் சந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறுதாமூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்லப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் து.முத்து, ஊராட்சி செயலாளர் முருகன் முன்னிலை வைத்தனர்.
முருங்கை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மணவாளன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் மகாலட்சுமி சக்திவேல், ஊராட்சி செயலாளர் வந்தே மாதரம் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, ஆர்ஞானபிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் அமைதியாக நடந்து.
சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் தேனம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. தலைவர் நித்தியா மாணிக்கம் ஊராட்சி செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைந்தங்கருணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆற்காடு ராஜசேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது துணைத்தலைவர் திலகவதி சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைந்தங்கருணை ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்புக்கு மேலும் ஒரு மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி கட்டுவது உயர் கோபுர விளக்கு அமைத்து கொடுத்தல் வெளியிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.