சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்


சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
x

சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு

முறைகேடு நடப்பதாக

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூனாம்பேடு முதல் நிலை ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு தி.மு.க.வை சேர்ந்த கண்ணன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் ஊராட்சி துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் சிலர் சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி கடந்த வாரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சூனாம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிகளின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

போலீஸ்நிலையம் முற்றுகை

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கடந்த 16-ந்தேதி சூனாம்பேடு போலீசில் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. பனையூர் பாபு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று சூனாம்பேட்டை அடுத்த ஒத்திவிளக்கம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 17 தீர்மானங்கள் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயா தெய்வசிகாமணி, பற்றாளர் திருலோக சந்தர், ஊராட்சி செயலர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஞான சங்கரி பள்ளி தலைமை ஆசிரியர்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள், உள்ளிட்ட 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீர்மானத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.


Next Story