பூங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


பூங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
x

பூங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பூங்குடி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அருணா தேவி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள் சிறப்பாக ஊராட்சியில் பணிபுரிந்தமைக்காக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் நடத்த அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றி தெரிவித்தும், ஊராட்சியில் மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால் தூர்வாரவும், மழைக்காலங்களில் ஊராட்சியில் தண்ணீர் தேங்கி தொற்று நோய்கள் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சித் துணை அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டி, சத்தியமங்கலம், நார்த்தாமலை, புல்வயல், அம்மாசத்திரம், புதூர், பரம்பூர், ராப்பூசல், பெருமநாடு, வயலோகம், ஈஸ்வரன்கோவில், இருந்திரப்பட்டி, தச்சம்பட்டி, கீழக்குறிச்சி உள்ளிட்ட 43 ஊராட்சிகளில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டங்கள் நடந்தது. கூட்டதிற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

43-ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியார்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர்.


Next Story