மே 1-ந் தேதி கிராம சபை கூட்டம்


மே 1-ந் தேதி கிராம சபை கூட்டம்
x

மே 1-ந் தேதி கிராமசபை கூடட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

மே 1-ந் தேதி கிராமசபை கூடட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 1-ந் தேதியன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு தவறாமல் கிராம சபைக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் ஆகியவை நடைபெறுகிறது.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-24), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வறுமை குறைப்புத் திட்டம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபைக்கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்வர். கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story