கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்


கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
x

நெல்வாய் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த நெல்வாய் ஊராட்சி, நெல்வாய் கண்டிகை கிராமத்தில் நேற்று கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றதலைவர் ரேணுகம்மாள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை வனிதா, கிராம நிர்வாக அலுவலர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சமூக பாதுகாப்புத்துறை சமூக பணியாளர் பார்த்திபன் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கவேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேன்மொழி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உஷா உள்ளிட்ட பெற்றோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர்.


Next Story