கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

கண்டியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு;

கண்டியூர் ஊராட்சியில் சுதந்திர தினவிழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனியப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, தனிதாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பாரதி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பொது நிதி வரவு செலவு, சுகாதாரம், குடிநீர், 15-வது நிதிக்குழு மானிய பணிகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள், பிரதமமந்திரி குடியிருப்பு திட்ட பணிகள், திறன்மேம்பாடு பயிற்சி திட்டம் ஆகிய திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் பொதுமக்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றி தரப்படும் என கூறினார். முடிவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சையதுமுபாரக் நன்றி கூறினார்.


Next Story