மோளையானூர் ஊராட்சியில்கிராமசபை கூட்டம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம் மோளையானூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரைபாண்டியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரியம் ரெஜினா, ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் இல்லா கிராமம், மழைநீர் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story