கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் வெங்கிடங்கால் ஊராட்சியில் உள்ள தூய்மை காவலர்கள் 2 பேரை பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநில தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் மகேந்திரன், பொருளாளர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் இளமதி, நிர்வாகிகள் பிரகாஷ், பாஸ்கரன், புகழேந்தி, கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வி, தூய்மை காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story