கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சீர்காழியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சீர்காழி வட்ட தலைவர் எருக்கூர் தாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ரவிச்சந்திரன், பொருளாளர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, குரூப் இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ேகாரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story