கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Oct 2023 8:45 PM GMT (Updated: 4 Oct 2023 8:45 PM GMT)

பொள்ளாச்சியில் கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரையின்படி நியாயமான ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். குரூப் காப்பீட்டை ரூ.5 லட்சமாகவும், பணிக்கொடையை ரூ.5 லட்சமாகவும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு வசதியை ஊழியர் உள்பட குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்களை கட்டாயப்படுத்தி அலைக்கழிக்கும் டார்கட் திட்டத்தை நிறுத்த வேண்டும். இறந்த ஜி.டி.எஸ். ஊழியரின் வாரிசுதாரருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தேசிய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர், தேசிய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் பாதிப்பு

அதன்படி பொள்ளாச்சியிலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் தபால் சேவை பாதிக்கப்பட்டது. பணம், தபால் பட்டுவாடா உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் வேலை நிறுத்தத்தையொட்டி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் செயலாளர் சுருளிவேல், பொருளாளர் முஸ்தபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story