கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம்


கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம்
x

செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வறுமை குறைப்பு திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாழ்வாதார இயக்க செந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் வேம்பு, கிராம வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணியாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு நடத்த வருவார்கள். அவர்கள் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், வடிகால் வாய்க்கால், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் கேட்பார்கள். அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். இந்த கூட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story