பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்


பூட்டி கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்
x

தச்சம்பட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பூட்டியே கிடக்கிறது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்சம்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை சாலை, மணலூர்பேட்டை சாலை, கிழக்கு தெரு, வடக்கு தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.13 லட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் போலீஸ் நிலையம் அருகே கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது.

இதன் காரணமாக இந்த கட்டிடத்தை இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது அருந்துவதும், பாட்டில்களை உடைத்து போடுவது மட்டுமல்லாமல் மின்சாரம் செல்வதற்கு போடப்பட்டுள்ள பைப்புகள் உடைத்து அதில் இருக்கும் ஒயர்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story