புதர் சூழ்ந்த கிராம சேவை மையம்
புதர் சூழ்ந்த கிராம சேவை மையம்
நெகமம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சேகவுண்டன்புதூர் ஊராட்சி சந்தேகவுண்டன்பாளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.17 லட்சம் செலவில் கடந்த 2015-16-ம் ஆண்டு கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இங்கு கணினி, மின்சாரம், குடிநீர் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளது.
இந்த மையம் மூலம் அனைத்து விதமான சான்றிதழ், பட்டா-சிட்டா நகல் எடுத்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். ஆனால் இதுவரை அந்த மையம் திறக்கப்படவில்லை. இதனால் மையத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறிவிட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், புதிதாக கட்டிய கிராம சேவை மையத்துக்கு செல்லவே வழி இல்லாத வகையில், புதர் மண்டி காணப்படுகிறது. நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால், கட்டிடம் பழுதடைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.