ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு:லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெமிலி கிராமத்தில் ஏரி உள்ளது. இங்கு சிலர், 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளி கொண்டு இருந்தனர். இதை அறிந்த கிராமமக்கள் லாரிகளை சிறைபிடித்து, அனுமதியின்றி ஏன் மண் அள்ளுகிறீர்கள் என்று லாரி டிரைவர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லரி டிரைவர்கள் மண்ணை அங்கு கொட்டிவிட்டு, திரும்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் செய்தனர். அப்போது அவர்கள் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story