குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம்
x

குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

வையம்பட்டியை அடுத்த தண்டல்காரனூர் கிராமத்தில் சமீபகாலமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இந்த நிலையில் குடிநீர் குழாய் செல்லும் இடம் தனி நபர் இடம் என்று கூறி அந்த இடத்தில் மட்டும் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிகப்பட்டது. இதனால் குடிநீர் இன்றி அவதி அடைந்த கிராம மக்கள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் உரிய தீர்வு கான வழிவகை செய்யப்படும். அதுவரை குடிநீர் லாரி மூலம் வினியோகிக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story