ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்


ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்
x

பெருமத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

வாக்குவாதம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களமேடு அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்திற்கு வந்திருந்த தந்தநல்லூர், பெருமத்தூர் குடிக்காடு, மிளகாநத்தம், பெருமத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு தெருவிளக்கு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தில் உள்ள பழைய கிணற்றுக்கு இரும்பு மூடி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவரை அலுவலக வளாகத்தில் வைத்து அலுவலக நுழைவு வாயிலை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேவையான அடிப்படை தேவைகளை விரைவில் செய்து தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story