கிராம மக்கள் சாலை மறியல் முயற்சி


கிராம மக்கள் சாலை மறியல் முயற்சி
x

கூடங்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.

திருநெல்வேலி

கூடங்குளம் அருகே சங்கநேரி கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இங்கிருந்து அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலை சேதம் அடைவதாக கிராம மக்கள் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் சங்கநேரி விலக்கு பகுதியில் டாரஸ் லாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரி நிறுவன அதிகாரிகளை வரவழைத்தனர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிதாக காங்கிரீட் ரோடு அமைக்கவும், குடிநீருக்கு ஆழ்குழாய்கள் அமைத்து தரவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story