பஸ் நிறுத்தம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


பஸ் நிறுத்தம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:30 AM IST (Updated: 19 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே மயிலாடுதுறை சாலையில் நத்தம் பஸ் நிறுத்தம் உள்ளது. இது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சீர்காழி-மயிலாடுதுறை இடையே உள்ள பல்வேறு வளைவு சாலைகளை நேர் சாலைகளாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி அருகே நத்தம் கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நத்தம் பகுதியை சேர்ந்த கிராமமக்கள் நேற்று இரவு தங்கள் பகுதிக்கு பஸ் நிறுத்தம் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story