கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x

திசையன்விளை அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி ஜோதிநகரம் கிராம மக்கள் அங்குள்ள ஓடை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அடக்க தலமாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தை பாதுகாக்க அரசு சார்பில் முள்வேலி (கம்பிவேலி) அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் முள்வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான், பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் 1¼ ஏக்கர் நிலத்தில் அடக்கதலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story