கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)

ஏர்வாடி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா வருகிற 8-ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி விழா கமிட்டியினர் சார்பில் சிறுமளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு (ஆர்ச்) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story