டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுப்பட்டி, விராலிப்பட்டி, திராணிப்பட்டி, கோமாபுரம், நைநாரிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கல்லுப்பட்டி மடம் பஸ் நிறுத்தம் அருகே சித்திரவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story