100 நாள் வேலை திட்ட பணி வழங்கக்கோரி கிராம மக்கள் தர்ணா
100 நாள் வேலை திட்ட பணி வழங்கக்கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆரணி
100 நாள் வேலை திட்ட பணி வழங்கக்கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக பனையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கூர் கிராம பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படவில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு ஒரு வாரம் மட்டுமே பணி வழங்கப்பட்டது. அதுவும் அப்பகுதியில் உள்ள வார்டு உறுப்பினரின் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி ஆய்வுக்கு சென்று இருந்ததால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரப்படவில்லை. இந்த நிலையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உதயகுமார் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அபர்போது குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு வருங்காலங்களில் முறையாக உங்களுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பானது.=====