2-வது நாளாக மர்மவிலங்கு கடித்து ஆடுகள் பலி சிறுத்தையும் நடமாடுவதால் கிராமக்கள் அச்சம்


2-வது நாளாக மர்மவிலங்கு கடித்து ஆடுகள் பலி சிறுத்தையும் நடமாடுவதால் கிராமக்கள் அச்சம்
x

நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 2-வது நாளாக ஆடுகள் இறந்தன. சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 2-வது நாளாக ஆடுகள் இறந்தன. சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆடுகள் பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கே.பந்தரப்பள்ளி பகுதியை சேர்ந்த அலுமேலு (வயது 70) ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மவிலங்கு கடித்ததில் 9 ஆடுகள் பலியானது.

இந்த நிலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் பூங்கான் வட்டம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (வயது 50)/ இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அக்ராகரம் பகுதியில் உள்ள வடிகி கவுண்டர் ஏரி அருகே கரும்பு தோட்டத்தில் ஆடு மேய்க்க சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு இடத்தில் ஆடுகளை கட்டி விட்டு தழைகளை போட்டு விட்டு சென்றுள்ளார்.மாலை 4 மணியளவில் வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்ததில் 2 ஆடுகள் இறந்ததை கண்டு திடுக்கிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர்கள் ரமேஷ், தயாநிதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பார்வையிட்டு மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

சிறுத்தை நடமாட்டம்

மேலும் அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கோபால் இவரது மகன் குட்டி என்பவர் சிறுத்தை புலியை பார்த்ததாக கூறினார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''பூனை வகையை சேர்ந்தது புனுகு பூனை. சிறுத்தை போன்ற தோற்றத்தில் இந்த பூனை உள்ளதால் இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக கூறுகின்றர். பொது மக்கள் யாரும் அச்சப் பட தேவையில்லை.

மர்ம விலங்கு கடித்ததில் ஆடு இறந்து உள்ளது. அந்த விலங்கு செந்நாயாகத்தான் இருக்கும். அதனை பிடித்து காட்டுக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றனர்.

மர்ம விலங்கு நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story