கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு மீனாட்சிபுரம் கிராம மக்கள் புரட்சிப் பாரதம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தாவீது ராஜா, ஊர் தலைவர் மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனாட்சிபுரம் கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய காலனி வீட்டை புதுப்பிக்க, அரசு மானிய தொகை அறிவித்தது. மானிய தொகை ஒரு வருடமாக வழங்கப்படாமல் உள்ளது. மானியத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதி அளித்தை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story