செஞ்சி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


செஞ்சி அருகே    கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x

செஞ்சி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சி அருகே கல்லாலிப்பட்டு கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்ததோட, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு கிராமத்தை சேர்ந்த ஒருதரப்பினர் திருப்பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் அனந்தபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முனீஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கண்டன கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story