கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடராஜபுரம், பசும்பொன் நகர் பகுதி மக்கள் நேற்று காலையில் கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் உள்ள பசும்பொன் நகர் மக்கள் நடராஜபுரம் தெரு வழியாகத்தான் பிரதான சாலைக்கு செல்ல வேண்டும். இந்த தெருக்களை இணைக்கும் பகுதியில் மூப்பன்பட்டி கண்மாய் தண்ணீர் செல்லும் ஓடை மீது அமைக்கப்பட்டு இருந்த பாலத்தை எந்தவித முன்னறிவிப்பு மின்றி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றிவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஓடை மீது விரைவில் பாலம் கட்ட வேண்டும், இதே போல் பசும்பொன் நகரில் சாலை, வாறுகால், மின்விளக்கு வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story