இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குணப்பனேந்தல் கிராமத்தில் திருமேனி அய்யனார் கோவில் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள இடத்தில் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி பொதுமக்கள் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாசில்தார் அசோக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆக்கிரமிப்பு தொடர்பாக யாரேனும் நீதிமன்றம் சென்றால் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தாசில்தார் அசோக்குமார் கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.


Next Story