கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது47).பா.ம.க. மாவட்ட துணை செயலாளரான இவர், அளக்குடி பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சிவபாலன் கீழே விழுந்தார். காரில் வந்த மகேந்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வமணி மற்றும் கார் டிரைவர் சுரேஷ் ஆகிய 2 பேரும் சிவபாலனை தாக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே ேமாதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார், சிவபாலன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்வமணி மற்றும் கார் டிரைவர் சுரேஷ் ஆகியோர் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் செல்வமணி, கார்டிரைவர் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலைமேடு திட்டு கிராமத்தில் ரேஷன் கடை அருகே கிராம மக்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் மகேந்திரப்பள்ளி கிராமத்திலும் கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story