அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் திடீர் போராட்டம்


அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் திடீர் போராட்டம்
x

வடக்கு விஜயநாராயணம் அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணம் அருகே ராமகிருஷ்ணபுரம் பஞ்சாயத்து தினையூரணி கிராம மக்கள் நேற்று திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு அந்த ஊர் வழியாக சரிவர இயங்காமல் உள்ள அரசு பஸ் தடம் எண் 165 எப், 106 பி மற்றும் தனியார் பஸ்களை முறைப்படி இயக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய பைப்லைன் அமைக்க வேண்டும். தினையூரணி குளத்துக்கு செல்லும் வழியில் வெள்ளநீர் கால்வாய் தோண்டப்பட்டதால் சரிவர பாதை இல்லாமல் உள்ளது. அதில் பாலம் அமைத்து பாதை ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள பல்நோக்கு கட்டிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தெருவில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் போன்ற அடிப்படை வசதிகளை கேட்டு இந்த போராட்டம் நடந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை மற்றும் திசையன்விளை போக்குவரத்து துறை அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story