கிராமமக்கள் திடீர் சாலை மறியல்


கிராமமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் கிராமமக்கள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் பகுதியில் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தை நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள்வரை குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மேற்படி நிலத்தை அளவீடு செய்வதற்காக தனி நபர் மற்றும் வருவாய்துறையினர் நேற்று வந்தனர். இதையறிந்து ஆத்திரம் அடைந்து அந்த பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சங்கராபுரம் -கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story