7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் அவதி
அரக்கோணம் பகுதியில் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணத்தை அடுத்த கார்பந்தாங்கல் கிராமத்தில் தினசரி மின் வெட்டு ஏற்பட்டு வந்்த நிலையில் நேற்று மாலை மின் வெட்டு ஏற்பட்டு சுமார் 7 மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் கிராமம் இருளில் மூழ்கியது. மேலும் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அவதிக்கு ஆளாகினர். அவ்வபோது ஏற்படும் மின் தடையை சரி செய்ய சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story