6 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்

குறித்த நேரத்துக்கு இயக்காததால் 6 பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள், கொட்டும் மழையில் சாலை மறியல் செய்தனர்.
பேரூர்
குறித்த நேரத்துக்கு இயக்காததால் 6 பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள், கொட்டும் மழையில் சாலை மறியல் செய்தனர்.
பஸ்கள் சிறைபிடிப்பு
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தெனமநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறித்த நேரத்திற்கு இயக்கப்பட வில்லை என பொதுமக் கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இது குறித்து, ஊர் பொதுமக்கள் அரசு பஸ் டெப்போவில் புகார் தெரிவித்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் நேற்று காலை போளுவாம்பட்டி மெயின் ரோடு தெனநல் லூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த 6 பஸ்களை திடீரென்று சிறைபிடித்தனர்.
கொட்டும் மழையில் மறியல்
ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. மேலும் அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கொட்டும் மழையில் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக சரியான நேரத்துக்கு பஸ்கள் இயக்கப்படாததால் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைகளுக்கு விவசாயிகளுக்கு செல்ல முடிவது இல்லை.
இது போல் பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் தங்களின் பணிகளுக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் ஊருக்குள் இருந்து போளுவாம்பட்டி மெயின்ரோட்டிற்கு நடந்து வந்து பஸ் ஏற வேண்டி உள்ளது.
இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ்களை குறித்த நேரத்துக்கு இயக்க வேண்டும் என்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சாலைமறியலால் போளுவாம்பட்டி மெயின் ரோட்டில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க பொதுமக்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், உரிய நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.






