தனியார் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
தனியார் பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் தொட்டியம் அருகே ஏழூர்பட்டி அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது மோதுவது போல் சென்றது. இதில் நிலைதடுமாறிய அந்த நபர் தவறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அந்த பஸ் நாமக்கல் சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தது. ஏழூர்பட்டியில் அந்த பஸ் வந்தபோது, பஸ்சை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதை அறிந்த காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.