கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்


கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:45 PM GMT)

எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள புதிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள புதிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.

மீன்பிடி திருவிழா

எஸ்.புதூர் ஊராட்சியில் புதிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மீன்பிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படும். கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாய பணிகள் நிறைவுற்ற நிலையில் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. நேற்று காலை முதலே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஏராளமானோர் கண்மாயை சுற்றிலும் காத்திருந்தனர்.

மீன்களை அள்ளிய கிராம மக்கள்

ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்ததும் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். அப்போது கண்மாயை சுற்றி காத்திருந்த கிராம மக்கள் ஊத்தா, கச்சா, தூரி, கொசுவலை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தொடங்கினர். அவர்களது வலையில் கெண்டை, கெழுத்தி, விரால், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. போதுமான அளவே மீன்கள் கிடைத்தாலும் அதை அனைவரும் பகிர்ந்தளித்து கொண்டனர்.

இதனால் கிராமப்புற பகுதியில் அனைவரது வீட்டிலும் நேற்று மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story