சாமி மாடு மீது மஞ்சள்நீர் ஊற்றி கிராம மக்கள் வழிபாடு


சாமி மாடு மீது மஞ்சள்நீர் ஊற்றி கிராம மக்கள் வழிபாடு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவரடிபாளையத்தில் காணும் பொங்கலையொட்டி மாடு மீது மஞ்சள்நீர் ஊற்றி கிராம மக்கள் வழிபட்டனர்.

கோயம்புத்தூர்

தேவரடிபாளையத்தில் காணும் பொங்கலையொட்டி மாடு மீது மஞ்சள்நீர் ஊற்றி கிராம மக்கள் வழிபட்டனர்.

காணும் பொங்கல்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையத் தில் காணும் பொங்கல் விழாவை மக்கள் வித்தியாசமாக கொண் டாடினார்கள்.

அதன்படி பொங்கல் தினத்தில் இருந்து 3 நாட்கள் கழித்து பசு மாடுகள் கன்று ஈன்றால் அந்த மாட்டை கோதவாடி ஆல் கொண்ட திருமால் கோவிலில் சாமிக்கு நேர்த்தியாக செலுத் துவார்கள்.

பின்னர் அந்தக் கன்றை வீட்டிலேயே வளர்ப்பார்கள். அது சாமி மாடு என்று அழைக்கப்படும்.

இந்த நிலையில் காணும் பொங்கல் நாளான நேற்று தேவரடிபா ளையத்தில் உள்ள சாமி மாட்டை விவசாயிகள் அதிகாலையில் குளிப்பாட்டி அரண்மனை வாசல் நடராஜர் என்பவர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு

அங்கு சாமி மாட்டின் கழுத்தில் மஞ்சள் துணியை சுற்றி, காலில் சலங்கை பூட்டி பூஜை நடைபெற்றது. அதன் பிறகு அந்த மாடு மீது மஞ்சள் நீர் ஊற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக அழைத்து செல்லப்பட்ட சாமி மாடு மீது கிராம மக்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.

இதையடுத்து கிராமமக்கள் தங்களது வீட்டிற்கு வந்த உறவினர் கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன் பிறகு நேற்று மாலை கோதவாடியில் உள்ள ஆட்கொண்ட திருமால் கோவிலுக்கு சாமி மாடுஅழைத்துச் செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தேவர டிப்பாளையத்தில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

ஐதீகம்

இது குறித்து தேவரடிப்பாளையம் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 50 ஆண்டுக்கு மேலாக காணும் பொங்கல் அன்று சாமி மாடுமீது மஞ்சள் நீர் ஊற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். அப்போது வீட்டின் முன்பு சாமி மாட்டின் சாணம், கோமியம் விழுந்தால் ஐஸ்வரியம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.


Next Story