வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
கரூர்
வெள்ளியணையில் பழமையான வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது விசாலமான பரப்பளவில் புதியதாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் நடக்கிறது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில், கிழக்கு மேட்டு புதூர் விநாயகர் கோவில், கடை வீதி தங்கம்மாள் கோவில் ஆகியவற்றிலும் திருப்பணிகள் முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story