விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

பணி அழுத்தத்தை குறைக்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்களுக்கு கொடுக்கப்படும் பணி அழுத்தத்தை குறைக்க வேண்டும், கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 688 ஊராட்சிகளில் பணிபுரியும் 510 ஊராட்சி செயலாளர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வளர்ச்சி பணிகள் பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே விழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தங்களது விடுமுறை கடிதத்தை அளித்தனர். மேலும் கோரிக்கை மனுவை தமிழக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடமும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story