விழுப்புரம் மாவட்டத்தில் 43 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில்  43 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 43 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த அருண்ராஜ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், விழுப்புரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சிவசக்தி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்கும், விக்கிரவாண்டி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் நாகராஜன் கஞ்சனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், கிளியனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கீதா திண்டிவனம் சிப்காட் அலுவலக நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும், விழுப்புரம் கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் தெய்வசிகாமணி திருவெண்ணெய்நல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் உஷாராணி திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் நேரு சாத்தாம்பாடி குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், மேல்மலையனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஏழுமலை செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கும், செஞ்சி ஆதிதிராவிட நல தனி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மேல்மலையனூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகத்திற்கும், திருவெண்ணெய்நல்லூர் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கும் இவர்கள் உள்பட 43 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி பிறப்பித்துள்ளார்.


Next Story