விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் சிங்காரம் வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டா் ரவிச்சந்திரன் கண்தான வார விழா விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கண்தானம் செய்வதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது கல்லூரியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், கண் மருத்துவத்துறை தலைவர் லதா, காது, மூக்கு தொண்டை துறை தலைவர் சவுந்தர்ராஜன், கண் மருத்துவத்துறையைச் சார்ந்த ஹெனா ரத்ன பிரியா, பாலன், தரணிவேல், அனுராதா, எலும்பு முறிவு இணை பேராசிரியர் அஞ்சன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story