விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம்சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை விழா


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம்சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை விழா
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் ஸ்ரீசபரிகிரீசன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி சபரிகிரீசன் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், நெய் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீ சபரிகிரீசன் சாமி, வன்புலிவாகனன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், குருசாமிகள் பாலு, மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஒன்றுகூடி பஜனை பாடல்கள் பாடி 18 படிகள் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story