கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு வேணுகோபாலசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு 7 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

உறியடி நிகழ்ச்சி

அதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு உறியடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, சாமி வீதியுலா நடைபெற்றது.

பின்னர் மாலையில் வேணுகோபாலசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story