விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் வீரவிநாயகர் சதுர்த்தி கமிட்டி மற்றும் அனைத்து இந்து சமுதாயம் சார்பாக விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். விபாக் சம்பூர்க் சாம்பவஜ் பொறுப்பாளர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். விஸ்வஹிந்து பரிசத் மாநில திருக்கோவில் திருமடங்கள் பொறுப்பாளர் சரவண கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இந்த ஆண்டு வீரவிநாயகர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன், தலைவராக மணிகண்டன், செயலாளராக முத்துமாரியப்பன், இணை செயலாளராக முருகன், பொருளாளராக காளிராஜ் மற்றும் கமிட்டி பொறுப்பாளர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மிக சிறப்பாக கொண்டாடவும், அமைதியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






