ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா


ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
x

ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் ராஜகணபதி கோவில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பு வழிபாடுகளுடன் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கோவிலில் தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கதிர்வேல்நகர் சக்தி விநாயகர் கோவில் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவிலில் இருந்து 101 பால்குடம் ஊர்வலம் தொடங்கி, கதிர்வேல்நகர் சக்தி விநாயகர் கோவிலுக்கு வந்தது. அங்கு சக்தி விநாயகருக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு யூனியன் கே.துரைசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கழுகுமலை அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாருகால் வசதி அமைக்கும் பணி நடந்தது. இதை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


Next Story